ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பார் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
“1994 ஆம் ஆண்டுகு பின்னர்ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்போம் என்ற வாக்குறுதி அளித்தன.
மஹிந்த ராஜபக்ஷவும் 2005 ஆம் ஆண்டு இதே வாக்குறுதியை வழங்கினார். எனினும், அதிகாரத்தைக் குறைக்காமல் 2010 ஆம் ஆண்டு 18 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை மேலும் கூட்டி இருந்தார்.
எமது அரசாங்கம் மாத்திரமே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்துள்ளது. எனினும், இந்த முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க உள்ளிட்டவர்கள், இந்த அதிகாரத்தைப் பகிர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க