உள்நாட்டு செய்திகள்புதியவை

மத்திய வங்கி ஆளுநர் ,சட்டமா அதிபர் தெரிவுக்குழுவில் சாட்சியம்

நாடாளுமன்ற தெரிவு குழு (பி.எஸ்.சி) முன் மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகள், அதன் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி மற்றும் சட்டமா த ப்புலா டி லிவேரா ஆகியோர் இன்று (26) சாட்சியங்களை அளித்து வருகின்றனர்.

மத்திய வங்கி ஆளுநரும் பிற அதிகாரிகளும் மட்டக்களப்பு கெம்பஸ் (பிரைவேட்) லிமிடெட் தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான ஆதாரங்களை அளித்து வருகின்றனர்.

அத்துடன் தாக்குதல்களுடன் தொடர்புடைய எந்தவொரு குழு அல்லது நபருடனும் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பில் சாட்சியம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது நடவடிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகள் மற்றும் இன்டர்போல் நீல அறிவிப்பு தொடர்பான ஆதாரங்களை சட்டமா அதிபர் வழங்கவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க