உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்வணிக செய்திகள்

தெங்கு உற்பத்தியாளர்களுக்கு விசேட செயலமர்வு

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தெங்கு உற்பத்தியாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று காலை வவுனியா பிரதேச செயலகத்தின் சமுர்த்தி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வவுனியா தென்னை பயிற்செய்கை சபையும், தென்னை அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த செயலமர்வில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தென்னை பயிற்செய்கையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் தென்னைப் பயிர்ச்செய்கை தொடர்பாகவும் தெங்கு உற்பத்திப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துதல் அத்துடன் தெங்குப்பயிர்ச் செய்கை மற்றும் உற்பத்தியாளர்களுக்கான வங்கிக் கடன்திட்டங்கள், உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் முகாமையாளர் பி.உதயச்சந்திரன் மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் உதவி நிர்வாக இயக்குனர் விலஜ ரம்யதாச, மற்றும் தெங்கு உற்பத்தி தெடர்பான தனியார் நிறுவனமென்றின் முகாமையாளர் லசந்த எ.விக்ரமசேன ஆகியோர் கலந்து கொண்டு குறித்த செயலமர்வில் தெங்கு விவசாயிகளுக்கான வளப்பகிர்வை வழங்கி இருந்தனர்.

கருத்து தெரிவிக்க