யானை மோசடி வழக்கு நிறைவடையும் வரை குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓகஸ்ட் 2 ம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அன்றையதினம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
யானை மோசடியில் ஈடுபடும் நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ‘அலி ரோஷன்’ என்பவரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் தீர்மானத்துக்கு அமைய சந்தேக நபர்களுக்கான பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்படும் சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க