சித்த வைத்தியத்தில் உள்ள மூலிகைளில் மிகச் சிறப்பு வாய்ந்தது கருஞ்சீரகம் ஆகும். இதில் அளவற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
கருஞ்சீரகத்தை தூளாக்கி சுடு நீர் அல்லது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், பித்தப்பை கற்கள், சிறுநீரகக்கற்கள் கரைந்து விடும்.
கருஞ்சீரகத்தை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோலில் உள்ள கிருமிகள், சொறி, சிரங்கு போன்றன குணமாகும்.
இதனை நமது அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கிவிடும்.
கருஞ்சீரகத் தூளை சுடுநீரில் அல்லது தேனில் குழைத்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் கட்டிகள் வராமல் பாதுகாக்கும்.
கருத்து தெரிவிக்க