கும்பகோணத்திலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை என்னும் ஊரில் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் காட்சியளித்து வரும் சிவபெருமானை தரிசனம் செய்தால், கண்ணில் ஏற்பட்ட நோய்கள் குணமாகிவிடும், திருமணம் வாய்ப்பு தள்ளிச் செல்கிறவர்களுக்கு, திருமணம் விரைந்து நிகழும், புத்திர பாக்கியம் அமையப்பெறாதவர்களுக்கு குழந்தைபேறு அமையும், பொருளாதார மற்றும் சொத்துப் பிரச்சனைகள் நீங்கும் என்பது ஹிந்துக்களின் தொன்மையான நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.
இத்திருத்தல மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தை கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், இந்த ஆலயத்தில் மட்டுமே சிவ பெருமான், பார்வதி அம்மையுடன் மானுட ரூபம் கொண்டு, திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இந்த திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மூலவரை நேரில் வந்து வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும் என்பது ஹிந்துக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.
கண்ணில் ஏதேனும் உபாதைகள் இருந்தால், இந்த ஈஸ்வரனின் தரிசனத்தால் அவை சீராகிவிடும் என்று கூறப்படுகிறது. மஹா விஷ்ணுவின் கண்ணை சிவபெருமானின் பாதத்தில் இன்றும் காணலாம்.
இந்த கோவிலில் வழிபாடு செய்ய செல்பவர்கள் விளாம்பழமும் தாமரை மலரும் வாங்கி செல்வது விசேஷம்.
கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து திருவீழிமிழலைக்கு செல்ல வேண்டும்.
கருத்து தெரிவிக்க