குருநாகல் வைத்தியர் ஷாபி தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி புவனேகு அலுவிஹார தலைமையில் விசாரிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்ற புலனாய்வு பிரிவு தன்னை தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோமானது என உத்தரவிடுமாறு கோரி குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.
வைத்தியர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி மீது , சொத்துகுவிப்பு, சட்டவிரோத கருத்தடை மற்றும் உள்ளட்ட சில குற்றம் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.
கருத்து தெரிவிக்க