உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் சர்வதேச சமூகத்தின் நலன்களுக்காக நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களின் பின்னர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டு நடைபெற்ற ஆராதனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை.
இது நாட்டினுள் குழப்பத்தை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் மேற்கொண்ட சதி. இதற்கு வழித்தவறி சென்ற இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எமது தலைவர்கள் சர்வதேச சக்திகளுக்கு தேவையான முறையில் நடந்து கொள்கிறார்கள். வளமிக்க நாட்டை மேலும் பலம் மிக்கதாக மாற்ற அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் பலம் வாய்ந்த புலனாய்வு பிரிவை தற்போதைய அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளது.
மாவனெல்ல புத்தர் சிலை தாக்குதலின் போது தகவல் வழங்கிய நபர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நிலையில் குற்றவாளிகளை விடுதலை செய்ததோடு இவ்விடயம் மூடி மறைகப்பட்டுள்ளது.
தற்போதைய தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லை இவற்றுக்கு காரணமான அரசாங்கம் உடனடியாக விலகி நாட்டை ஆட்சி செய்யக்கூடியவர்களுக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க