கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை பிரதேசத்தில் மெற்கொள்ளப்பட்டுவரும் முறையற்ற மண்ணகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் மண்ணகழ்வு மெற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இன்று பிற்பகல் பூநகரி காவல் நிலையத்தில் ஒன்று கூடியுள்ளனர்.
குறித்த மக்களுடன் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் சென்றிருந்தார். இதன் போது காவல்துறையினருக்கும் பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் கலந்துரைாயாடல் இடம்பெற்றது.
இதை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழங்கு தொடர்ந்து, மண்ணகழ்வை நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
கருத்து தெரிவிக்க