இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகளின் சபையின் சமாதானம் மற்றும் உரிமைகளுக்கான விசேஷ ஐக்கியையாளர் இலங்கையில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
முன்னதாக அவர் கடந்த வார இறுதியில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சந்தித்திருந்தார் இதன்போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு இருந்தன.
குறிப்பாக ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்றிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னர் இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் இந்த ஒரு வார காலத்துக்கு இலங்கையில் தங்கி வருகிறார்.
இந்த காலத்துக்குள் அவர் வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். இதன்போது அவர் பல்வேறு மட்டத்தினருடனும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றார்.
கருத்து தெரிவிக்க