உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் சுமார் 4000 பேர் வரை இலங்கைக்கு வருகைதந்திருந்தனர் ஏற்கனவே இந்த வருகை 3200 ஆக இருந்தது இந்த தகவலை இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்ற பின்னர் இந்த சுற்றுலா பயணிகள் வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

ஒரு நாளைக்கு பத்தாயிரம் பயணிகள் வருகை தருகின்ற கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயிரம் பேர் மட்டுமே வருகின்ற ஒரு நிலைமை காணப்பட்டது ஆயினும் தற்போது அந்த நிலைமை சீரடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பார்க்கின்றபோது 726 பேர் வரை சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வந்திருந்தனர். எனினும் அது 2019ஆம் ஆண்டு மே மாதம் 71 வீதத்தால் குறைந்திருந்தது.

மேலும், 1200 பேர் மாத்திரமே ஒரு நாளைக்கு இலங்கைக்கு வந்து சென்ற ஒரு நிலைமையும் காணப்பட்டது.

இதனை சீர் படுத்தும் முகமாக சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்ந்தும் பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க