ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் இந்த விசாரணைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.
இவர் தமது சிற்றூர்ந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அது விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார் என்ற தகவல்கள் முதலில் வெளியாகி இருந்த போதும் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் இருக்கின்றது எனவே அதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
என்றாலும் உரிய சாட்சியங்கள் இன்றி அந்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே தற்போது இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கில் முதல் குற்றவாளியாக சிரேஷ்ட காவல்துறை அதிபர் அனுர சேனநாயக்க முன்னிலைப் படுத்திப்படவுள்ளார்.
அதேபோல தேசிய வைத்தியசாலையின் ஆனந்த சமரசேகர என்ற சட்ட வைத்திய அதிகாரி முக்கியமான பிரதிவாதியாக குறிப்பிடப்படுகிறது.
இவர் தாஜூதீனின் உடற்பாகங்களை அவசரமாக அகற்றினார் என்ற ஒரு குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
எனவே அனுர சேனாநாயக்க, ஆனந்த சமரசேகரவும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக என குறிப்பிடப்படுகிறார்கள்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில், ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மனைவி சிராந்தி ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சிராந்தி ராஜபக்சவிற்கு ஒரு தொண்டு நிறுவனம் வழங்கிய வாகனம் ஒன்று கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்து அவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு ஆரம்பிக்கும்போது மீண்டும் இலங்கையில் ஒரு புதிய செய்திகளை எதிர்பார்க்க முடியும் என்ற கருத்தும் வெளியாகி இருக்கின்றது
கருத்து தெரிவிக்க