வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் கடும் வெயில் !

அமெரிக்காவில் கடும் வெயில் காரணமாக மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். வோஷிங்டன், நியூயோர்க், பாஸ்டன் போன்ற நகரங்களிலும், கனடாவிலும் வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டும் என அந்நாட்டு வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

பல கோடி மக்கள் வெயிலால் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் உலகிலேயே அதிகமான வெப்ப வாயுக்களை வெளியேற்றும் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க