உள்நாட்டு செய்திகள்புதியவை

போதைப்பொருள் ஒழிப்புக்கு விசேட நடவடிக்கை

போதைப்பொருள் ஒழிப்புக்கான விசேட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூன்று பாதுகாப்பு பிரிவுகளாலும் எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் (பி.என்.பி) பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மடவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை, விசேட பணிக்குழு மற்றும் கடற்படை ஆகியவற்றால் மேற்படி நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதி வரை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் தொடர்புடையவற்றை காவல்துறை, விசேட பணிக்குழுவும் அதே நேரத்தில் கடல் பகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகளுக்கு கடற்படையும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போதைப்பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்கள் ஈரான், பாகிஸ்தான், மலேசியா மற்றும் தாய்லாந்தில் இருந்து இலங்கை கடலுக்குள் நுழைந்திருப்பது அண்மைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க