உள்நாட்டு செய்திகள்புதியவை

‘பேஸ் எப்’ செயலி பயன்பாடு: தகவல் தொடர்பாடல் மையத்தின் எச்சரிக்கை

பேஸ் எப் செயலியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் தங்களது தனியுரிமை குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை தகவல் தொடர்பாடல் சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஃபேஸ் எப் என்ற செயலியைப்  பயன்படுத்தி, தங்களது வயதான தோற்றத்தை பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

“இந்த செயலியை உருவாக்கியவர்கள் தரவேற்றப்படும் படங்களை தங்கள் தரவுத்தளத்தில் எவ்வளவு காலம் சேமித்து வைப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை,” என தகவல் தொடர்பாடல் மைய தலைவர் குருவிடேஜ் மேத்யூ கூறினார்.

ஒரு பயனரின் தொலைபேசியில் உள்ள ஒளிப்படங்களை அவரது அனுமதியின்றி ஹேக்கர்களால் அணுக முடியும் என சமீபத்திய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க