இலங்கையின் ஆட்சி மாற்றங்களுக்காக அமரிக்க அரசாங்கம் நிதியுதவி செய்வதில்லை என்று அமரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஐக்கிய தேசியக்கட்சியை தொடர்ந்தும் ஆட்சியில் அமர்த்தியிருக்கவேண்டும் என்று அவசியமும் தமது நாட்டுக்கு இல்லை என்று அமரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு அரசாங்கத்தை தெரிவுசெய்த இலங்கையின் பொதுமக்கள் இன்னும் சில மாதங்களில் மற்றும் ஒரு அரசாங்கத்தை தெரிவுசெய்வர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தமது அரசாங்கம் தயார் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துக்கொள்வதற்கு இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் காரணம் அல்ல.
மாறாக பிராந்தியத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்த உடன்படிக்கைக்கு அமரிக்கா தயராகிறது என்றும் அமரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க