சினிமா

விஜய் தேவரகொண்டாவின் படத்தில் இணைந்த பிரபல தமிழ், மலையாள நடிகர்கள்!

கீதா கோவிந்தம்’ திரைப்படத்திற்கு பிறகு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இணைந்துள்ள படம் ‘டியர் காம்ரேட்’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘காம்ரேட் அந்தம்’ பாடலை மூன்று மொழிகளில் பாடியுள்ளனர். அந்தவகையில் பாடலை தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து பாடியுள்ளனர். ‘என் இனிய தமிழ் மக்களே…  சகாக்காளே … தெலுங்கு பிரஜல்லாரா … ‘ என்று தொடங்கும் இந்த பாடல் இன்று  காலை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம், யாஷ் ரங்கினேனி தயாரிப்பில், இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா  நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க