வெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு : 88 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்,  வீதிகள் முழுதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகளும்  ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் 25 மாவட்டங்களில் உள்ள 10385 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை அப்புறப்படுத்தி அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகளை அந்நாட்டு அரசாங்கம் செய்து வருகிறது.

இதுவரை வெள்ளத்தில் மூழ்கி 88 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக நீரால் பரவக்கூடிய நோய்கள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.  பொதுமக்களுக்கு முறையான சுகாதார சேவைகளை வழங்கி, நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச நாடுகளின் உதவியை அந்நாடு கோரியுள்ளது.

கருத்து தெரிவிக்க