அழகு / ஆரோக்கியம்

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். பல வகையான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் புனிதமான பொருளாகவும் பயன்படுகிறது. இதன் பலன்கள் பற்றி பார்ப்போம்.

வயிற்றில் இருக்கும் வாய்வை வெளியேற்றும். உடலுக்குள் இருக்கும் நுண்கிருமிகளையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

காலையில் வெறும் வயிற்றில் 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து நன்றாக மென்று அதன் சாற்றை விழுங்க வேண்டும். இவ்வாறு இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

வெற்றிலை சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து அதில் அரை தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறுவதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

கடுகு எண்ணெயை சூடாக்கி அதனுள் இரண்டு வெற்றிலைகளை போட்டு இலேசாக வதக்கவும். பின் இளஞ்சூட்டோடு நெஞ்சில் சிறிது நேரம் வைத்திருக்க மூச்சுத்திணறல் குணமாகும். அத்துடன் நெஞ்சில் உள்ள சளியையும் அகற்றும்.

5 வெற்றிலைகளை துண்டுகளாக்கி சிறிதளவு உப்பைச் சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். காலையில் இதனைப் பருகி வந்தால் யானைக்கால் நோய் , விதை வீக்கம் போன்றவை குணமாகும்.

வெற்றிலைச் சாறில் ஒரு துளியை காதுக்குள் விட காது வலி நீங்கும். மேலும் கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றை பலப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மையும் கொண்டது.

கருத்து தெரிவிக்க