வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் கிழமை (17) காலை ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த மக்கள் சந்திப்பின் போது வடமாகாணத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் வருகை தந்திருந்தனர்.
இதன் போது குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், தீர்வை பெற்றுக்கொள்ள நூற்றுக்கனக்காணவர்கள் வருகை தந்திருந்தனர்.
வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் கடந்த 3 ஆம் திகதி (3-07-2019) காலை வடமாகாண ஆளுனரின் மக்கள் சந்திப் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த சந்திப்பில் ஏராளமான பொது மக்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுனர் உற்பட பொறுப்பு வாய்ந்த சில அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.
இதனால் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையிலே குறித்த மக்கள் சந்திப்பு மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுனர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
இதே வேளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அசராங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் அடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க