ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் உதவுகிறார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இந்தக்குற்றச்சாட்டை இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது முன்வைத்தார்.
உயர்நீதிமன்றம் உத்தரவிடுமானால் ஒக்டோபர் 15இல் மாகாணசபை தேர்லை நடத்தமுடியும் என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது பொய்யான ஒரு கூற்றாகும். மாகாணசபை தேர்தலை நடத்தும் முன்னர் சில திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறவேண்டியுள்ளது.
எனினும் அதனை தெரிந்துக்கொண்டே மஹிந்த தேசப்பிரிய இந்த பொய்யை கூறியுள்ளதாக அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க