அழகு / ஆரோக்கியம்

முகம் பளபளப்பாக மாற சில குறிப்புகள்

தோடம்பழத் தோல், ரோசா இதழ்கள் இரண்டையும் காய வைத்து தூளாக்கி, அவற்றுடன் 2 கப் கடலை மாவை கலந்து வைக்கவும். இரவில் இந்தக் கலவையில் 2 தேக்கரண்டி எடுத்து பால் ஆடை சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 25 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இவ்வாறு கிழமையில் இரண்டு தரம் செய்து வந்தால் முகம் அழகாக மாறும்.

பால் காய்ச்சும் போது அதன் ஆவியை முகத்தில் பிடிக்கவும். வியர்வையை துடைக்காமல் காய வைத்து அரை மணித்தியாலம் கழித்து கழுவி விடலாம்.

தக்காளியை அரைத்து அதன் சாறை முகத்தில் பூசி காய்ந்ததும், கடலை மாவினால் தேய்த்து கழுவி விடவும்.

நன்கு பழுத்த வாழைப் பழத்தை மசித்து அதனை முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் பொலிவுறும்.

கொத்தமல்லி இலைச் சாற்றில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால், முகம் மிருதுவாக மாறும்.

கருத்து தெரிவிக்க