வடக்கு செய்திகள்

பருத்தித்துறை தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழ் பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுடன் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் லீசிங் கம்பனி ஒன்றில் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்து அதற்குரிய மாதாந்த பணத்தைச் செலுத்துவதற்கு அவகாசம் கேட்டபோது பண வசூலிப்பாளர் தனது அடியாட்கள் மூலம் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்து பின்னர் மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அன்றிரவு மருத்துவமனைக்குள் உட்புகுந்த குழு வன்முறையில் ஈடுபட்டு ஏலவே தாக்குதலுக்கு உள்ளான வாகன உரிமையாளரை மேலும் தாக்கியதுடன் தடுக்க வந்த
தாதியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தும் வைத்தியசாலை காவல் பொலிஸ் அலுவலகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதற்கு உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க