உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

வலுக்கிறது எதிர்ப்பு! பிரதமரை அவசரமாக சந்திக்கிறார் ரஞ்சன்!

” பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளை (17) நேரில் சந்தித்து – நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய அறிவிப்பு குறித்து  விளக்கமளிப்பேன்.” என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (16) தெரிவித்தார்.

சமூகவலைத்தளமொன்றுக்கு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வழங்கிய நேர்காணலானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நேர்காணலின்போது அவர் வெளியிட்ட கருத்தானவை மகாநாயக்க தேரர்களையும், பௌத்த துறவிகளையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளன என்று அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டிவருகின்றன.

அத்துடன், சிங்கள், பௌத்த மக்களிடம் அவர் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றன.

இவ்விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு விளக்கமளிக்குமாறு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஊடாகரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையிலேயே பிரதமரை நாளை நேரில் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

 

கருத்து தெரிவிக்க