உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

காணி ஆக்கிரமிப்பு :உரிமையாளர் போராட்டம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் ஒருவர் தனது காணியை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நிலையில் காவல்துறையின் வாக்குறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான காணியை ஒன்றை தென் பகுதியில் இருந்து வந்த ஒருவரும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஒருவரும் காணியை அத்து மீறி ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரிடம் முறையிடபட்டது.

எனினும் குறித்த அதிகாரிகள் வெளியேற மறுத்து வந்துள்ளனர். இதையடுத்து இன்று பகல் காணி உரிமையாளரான குறித்து பெண் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சிப் காவல்துறையினர் இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு காணி உரிமையாளர் அவரது காணிக்குள் குடியிருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அத்துமீறி குடியிருப்பவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க