உள்நாட்டு செய்திகள்புதியவை

சுகாதார தயாரிப்பில் ஈடுபடும் வெலிக்கடை பெண் சிறைக்கைதிகள்

வெலிக்கடை சிறையில் உள்ள ஆறு பெண் கைதிகள் தற்போது சுமார் 500 பெண் கைதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சனிட்டரி நேப்கின்களை தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறித்த நேப்கின்களை தயாரிக்க சார்க் பெண்கள் அமைப்பு ரூ .2 மில்லியன் மதிப்புள்ள இயந்திரத்தை நன்கொடையாக வழங்கிய நிலையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

”சில குடும்பங்கள் தேவையான சுகாதார பொருட்களை வழங்கினாலும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் உட்பட மற்ற கைதிகளை எவரும் பார்வையிட வருவதில்லை” என சிறைச்சாலை ஆணையர் சந்தன ஏகநாயக்க கூறியுள்ளார்.

சிறைச்சாலை மூலம் மேற்கொள்ளப்படும் சுகாதார தயாரிப்புகள் போதுமானதாக இல்லை என்றும், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் மூலம்  இந்த தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க