2017 ஆம் ஆண்டின் விவசாயத்துறை அமைச்சராகவிருந்த துமிந்த திசாநாயக்கவின் அமைச்சு கட்டிடத்தை புனரமைப்பதற்காக அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தை புனரமைப்பு செய்வதற்காக 2017 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதிக்குடன் முழுமையான பணிகள் நிறைவடைய வேண்டும் என்ற அளவில் 24 தசம் 6 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. என்றாலும் குறித்த பணிகளை உரிய நிறுவனம் உரிய காலத்துக்குள் நிறைவு செய்யவில்லை.
மேலும் குறித்த நிறுவனத்துக்கு மேலதிகமாக நான்கு மாதங்கள் அவகாசமாக கொடுக்கப்பட்டன அதன்படி 24 தசம் 6 மில்லியன் ரூபாய்கள் அந்த நிறுவனத்துக்கு செலவிடப்பட்டுள்ளன.
எனவே இது அமைச்சு ஒதுக்கீடு செய்த அளவிலும் பார்க்க அதிகமான செலவை அந்த கட்டிடத்திற்கு செலவிட்டதாக இந்த விசாரணையிலிருந்து தெரியவந்திருக்கின்றது
கருத்து தெரிவிக்க