நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் வில்லியம்சன் நடப்பு உலக கிண்ண தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று முன் தினம் இடம்பெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் 30 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். இதன் மூலம் நடப்பு தொடரில் வில்லியம்சன் 578 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் கேன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, உலகக் கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணித் தலைவர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார்.
9 இன்னிங்ஸ்களில் 578 ஓட்டங்களை கடந்து இலங்கையின் கிரிக்கட் வீரர் ஜெயவர்தனவின் சாதனையை வில்லியம்சன் முறியடித்தார்.
இதன் படி ஒரு உலக கிண்ண தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற அணித்தலைவர் பட்டியலில் வில்லியம்சன் -578 (2019), ஜெயவர்த்தன -548 (2007) ,ரிக்கி பொண்டிங் -539 (2007), ஆரோன் பிஞ்ச் -507 (2019) ஆகியோர் முறையே முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.
கருத்து தெரிவிக்க