அமெரிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பை அதிகரித்தது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என இங்கிலாந்து , ஜேர்மனி போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்கி, திணிக்கப்பட்ட பொருளாதாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒப்பந்தத்திற்கு திரும்பினால் இப்போதே பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ருகானி தெரிவித்திருக்கின்றார்.
கருத்து தெரிவிக்க