நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டில் 25 மாவட்டங்களில் 10385 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றது.
நேபாளத்தில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடரும் கனமழை காரணமாக தொற்றுநோய்கள் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாடு கோரியுள்ளது.
கருத்து தெரிவிக்க