மிகவும் பயனுள்ள சிகிச்சை முறைகளில் மசாஜ் தெரபி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் உடலின் சில பகுதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதனால் மன அழுத்தம் குறைவதோடு உடலும் மனமும் இலேசாகிறது. இந்த மசாஜ் தெரபிகளில் ஒன்று தான் பாத மசாஜ் தெரபி.
தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களை மசாஜ் செய்வதால் பாதங்களுடன் நேரடி தொடர்புடைய உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
பாதத்தை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து மூட்டு எலும்புகள் வலுவடையும். மேலும் பாதத்தில் உள்ள மென்மையான திசுக்களும் வலுவடையும். கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். கண் பார்வை அதிகரிக்கும். பாத வெடிப்பு , தசைநார்களில் ஏற்படும் எரிச்சல் போன்றன குணமாகும்.
மேலும் தசை நார், நரம்பு மண்டலம் உட்பட உடலில் உள்ள எல்லா பகுதிகளிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தம், சோர்வு, பதட்டம், வலிகள் போன்றவற்றிலிருந்து விடுதலை தருகிறது. அத்துடன் பாதங்களை மசாஜ் செய்வதால் சருமம் மிருதுவாகும்.
மேலும் இரத்த ஓட்டம் தூண்டப்படுவதால் நிம்மதியான உறக்கத்தை தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
காலின் பெருவிரலோடு மூளையும் , நுரையீரலும் நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. எனவே காலின் பெருவிரலை மசாஜ் செய்வதால் மூளை, நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். அத்துடன் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களை மசாஜ் செய்வதால் பல் வலி குறையும். ஜந்தாம் விரலை மசாஜ் செய்தால் காது வலி குணமாகும்.
பாத மசாஜ் செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒலிவ் ஒயில், ரோஸ்மேரி ஒயில், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து அதனுள் பாதங்களை சில நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் அப்படியே கையினால் மென்மையாக அழுத்தி மசாஜ் செய்யவும். மூட்டுகளில் வட்டமாகவும், கால்களில் செங்குத்தாகவும் மசாஜ் செய்யவும். பின் கால்களை வெளியில் எடுத்து உலர வைக்கவும். மசாஜ் செய்ததும் நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பதை உணர்வீர்கள். எனவே தினமும் படுக்கும் முன் பாதங்களை மசாஜ் செய்வதால் பல நன்மைகளை அடைவீர்கள்.
கருத்து தெரிவிக்க