உலக கிண்ண கிரிக்கெட்டில் நியூசிலாந்துடன் போட்டியிட்டு இங்கிலாந்து அணி முதல்முறையாக உலக கிண்ணத்தை உச்சிமுகர்ந்தது.
இதேவேளை இறுதி ஆட்டம் இரண்டு முறை சமனில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 8 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிக சிறப்பாக இருந்த நிலையில் நியூசிலாந்து வீரர்களால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போய் இருந்ததென சொல்லலாம்.
இந்நிலையில் மிக இலகுவில் கிண்ணத்தை சுவீகரித்து விடலாம் என களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து தக்க பதிலடி கொடுத்தது.
போட்டியின் இறுதி வரையில் நியூசிலாந்து நெருக்கடியை கொடுக்க இறுதியில் போட்டி சமநிலையில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 15 ஓட்டங்களை பெற பதிலுக்கு விளையாடிய நியூஸிலாந்தும் 15 ஓட்டங்களை பெற்றது.
இவ்வாறு இரு முறை போட்டி சமநிலையில் முடிய பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்நிலையில் அதிக 4 ஓட்டங்களை பெற்ற அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும். இதனடிப்படையில் போட்டியில் கூடுதலாக ஆறு முறை 4 ஓட்டங்களை பெற்ற இங்கிலாந்துக்கு வெற்றி கிண்ணம் சென்றது.
44 ஆண்டு கால உலக கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து கிண்ணத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியால் அந்த நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
கருத்து தெரிவிக்க