தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் ஒருவர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.
இதன்காரணமாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நாளன்று அவர் இந்தியா நோக்கி பயணமானதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், முற்போக்கு கூட்டணியும் தன்னை புறக்கணிக்கும் வகையில் செயற்படுவதாக அவர் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
வத்தளையில் தமிழ்ப் பாடசாலை மலர்வதற்கு தானும் முழு பங்களிப்பை வழங்கியதாகவும், ஆனால், ஊடகங்களிலும், திறப்பு விழா உட்பட ஏனைய நிகழ்வுகளின்போது தனது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
கருத்து தெரிவிக்க