அழகு / ஆரோக்கியம்

அக்ரூட் (வாதுமை) பருப்புகளில் உள்ள பயன்கள்

அக்ரூட் பருப்புகளில் புரதம், ஊட்டச்சத்துகள் போன்றன அதிகம் உள்ளன.  எமது அன்றாட உணவில் அடிக்கடி அக்ரூட் பருப்புகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் இதில் கொழுப்பைக் கரைக்கக் கூடிய சக்தி உள்ளதால் இதய நோய்களை குணமாக்கும். மேலும் இவை உடல் ஆரோக்கியத்தோடு மன ஆரோக்கியத்தையும் தருகின்றது. பண்டைய கால உணவுககளில்  அக்ரூட் பருப்புகள் பெரும் பங்கு வகித்தன. இவற்றில் உள்ள பயன்கள் பற்றி பார்ப்போம்.

அக்ரூட் பருப்புகளில் விற்றமின் , தாதுப்பொருட்கள், ஆன்டி ஒக்ஸிடென்ட் , கொழுப்பு அமிலங்கள் போன்றன அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. அன்றாட உணவில் 8 அல்லது 10 பருப்புகளை உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தியை தரும்.

மேலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். கொழுப்பைக் கரைப்பதால் இளமையாக இருக்க உதவும்.

ஒரு முட்டையை உண்பதால் கிடைக்கும் புரதத்தை விட அக்ரூட் பருப்புகளில் புரதம் அதிகமாக உள்ளது.

அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதால் புற்றுநோய் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

எலும்பின் வலிமையை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியமான நித்திரையை தரும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

கருத்து தெரிவிக்க