உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கேப்பாப்புல விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இராணுவ வீரர்கள் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் , சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க