புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ணத்தை வெல்லப்போவது யார்?

2019 ஐ.சி.சி உலக கிண்ண தொடரின் அரையிறுதியில் வெற்றிகண்ட இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இன்று இறுதி போட்டியில் களம் இறங்குகின்றன.

போட்டி இங்கிலாந்தில் லார்ட்சில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணிக்கான ஆதரவு அதிகளவில் காணப்படும் என சொல்லப்படுகிறது.

தங்களது முதலாவது உலக கிண்ணத்தை வெல்லும் கனவுடன்  இவ்வணிகள் இன்று  களமிறங்குகின்றன.

44 ஆண்டு கால உலக கிண்ண வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை கிண்ணத்தை வென்றதில்லை என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

2015–ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவிடம் ‘சரண்’ அடைந்த நியூசிலாந்து அணியினர் இந்த முறை உலக சம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவதற்காக  முனைப்பு காட்டுவார்கள் என குறிப்பிடப்படுகிறது.

வெற்றி பெரும் அணி உலக கிண்ணத்தை வென்ற அணிகளின் பட்டியலில் 6–வது அணியாக இணைய உள்ளது .

கருத்து தெரிவிக்க