மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வளவ வலயத்தின் ஐயாயிரம் மகாவலி விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (14) முற்பகல் வளவ வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலக விளையாட்டரங்கில் இடம்பெறும்.
மகாவலி விவசாயிகள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவந்த பிரச்சினைக்கு தீர்வாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் 2016ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அனைத்து மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் தனியான மகாவலி காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
அந்த வகையில் மகாவலி பி வலயத்தில் 46609, சி வலயத்தில் 47808, டி வலயத்தில் 5305, எச் வலயத்தில் 22537, எல் வலயத்தில் 14372, விக்டோரியா வலயத்தில் 4848, குருலுவெவ வலயத்தில் 5167இ மொரகஹகந்த 9463, வளவ வலயத்தில் 43718, ரம்புக்கன் ஓய வலயத்தில் 5854 காணி உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மகாவலி குடியேற்றவாசிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி அவர்களது நலன்பேணலுக்காக கடந்த நான்கு வருடங்களாக ஜனாதிபதியின் வழிகாட்டலில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மகாவலி வலயத்தை போதையிலிருந்து விடுதலைப்பெற்ற வலயமாக ஆக்குவதற்கும் தற்போது விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க