உள்நாட்டு செய்திகள்

‘நெதர்லாந்துடனான கடன் உடன்படிக்கை கைச்சாத்தானது’

வட மாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளின் அபிவிருத்திக்கு 45 மில்லியன் யூரோ கடன் பெறும் உடன்படிக்கை (இலங்கை பெறுமதியில் 9 பில்லியன்) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கிக்கும் இடையில் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க கைச்சாத்திட்டுள்ளார்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய விசேட மகப்பேற்று அமைப்பு அமைத்தல், வவுனியா பொது வைத்தியசாலையில் விசேட இதயவியல் மற்றும் நரம்பியல் மையம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் உளநலப் பிரிவுடன் கூடிய விசேட தேவைக்குரியவர்களுக்கான புனர்வாழ்வு மையம் மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அவசர சேவைப் பிரிவு உட்பட பல திட்டங்கள் இதன் மூலம் முன்னெடுப்பக்கடவுள்ளன.

.

கருத்து தெரிவிக்க