ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிகாலம் 2020 மே மாதம் 15 ஆம் திகதியே நிறைவுக்குவருகின்றது என சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலர், சுதந்திரக்கட்சியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
” நாடாளுமன்றத்தில் சட்டமொன்று இயற்றப்பட்டாலும் – அதில் சபாநாயகர் கையொப்பமிட்ட தினத்திலிருந்தே அது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.
எனவே, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சபாநாயகர் கையொப்பமிட்ட திகதியிலிருந்து 5 ஆண்டுகள்வரை ஜனாதிபதியால் பதவி வகிக்கமுடியும்.
19 ஆவது திருத்தச்சட்டமானது 2015 ஏப்ரல் 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மே 15 ஆம் திகதியே சபாநாயகர் அதற்கு கையொப்பமிட்டு அனுமதி வழங்கினார்.
இதன்பிரகாரம் ஜனாதிபதியால் 2020 மே மாதம் 15 ஆம் திகதிவரை பதவியில் இருக்கமுடியும்.”
– என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க