பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை தீர்க்க தொடர்ச்சியான முயற்சிகள் அவசியம் என தெளிவாக தெரிவதாக கொழும்பு மாநகர சபை தொம்சன் ரொய்ட்டஸிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர் பகுதியில் வீதிகளிலும் பொதுப் போக்குவரத்திலும் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து கார்கள் தங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குகின்றன என பெண்ணொருவர் சீற்றமாக தெரிவித்துள்ள நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
இதேவேளை ஆரோக்கியமான” வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக இலங்கையின் நெரிசலான நிலையை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை கார் பயணங்களை தவிர்க்குமாறு மேயர் முன்பு அறிவித்திருந்தார், இது தொடர்பில் சில எதிர்ப்புகள் எழ கூடும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கருத்து தெரிவிக்க