உள்நாட்டு செய்திகள்புதியவை

சர்வதேச கண்டனம்: மீண்டும் விசாரணைக்கு வரும் திருகோணமலை வழக்கு

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.

சர்வதேச கண்டனங்களை அடுத்து மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  ஏ. எப். பி (AFP) தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறித்த வழக்கின் முக்கிய சாட்சிகள் மூவரை கண்டறியுமாறு அண்மையில் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

குறித்த நபர்கள் சாட்சியளிமளிக்க தவறிய நிலையிலேயே திருகோணமலை நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்தது.

இந்நிலையில் இலங்கையில் நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து குறித்த வழக்கு விசாரணை சர்வதேச மட்டத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை சட்ட தரப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மீண்டும் விசாரணை ஆரம்பிக்க முனைப்பு காட்டியுள்ளது.

குறித்த வழக்கு ‘trinko 5’ என சர்வதேச அளவில் பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையிலும் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க