உள்நாட்டு செய்திகள்வணிக செய்திகள்

‘நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான மட்டத்தை அடைந்துள்ளது’

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாகவும் இது தீர்மானிக்கப்பட்ட 4 சதவீதத்திற்கும் 6 சதவீதத்திற்கும் இடைப்பட்ட வீதத்தில் காணப்படுகின்றது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது வட்டி விகிதங்களும் குறைந்திருப்பதாகவும், வைப்புக்கள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறு வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா விடுதிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை தமது சுற்றுலா தலமாக தெரிவு செய்யும் பயணிகளுக்கு பல நாடுகள் விதித்திருந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பெரலிய கிராமியப் புரட்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக 300 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க