அழகு / ஆரோக்கியம்

இதய நோய்களை குணமாக்கும் சில மூலிகைகள்

எம்மைப் பாதிக்கும் நோய்களில் நீரிழிவுக்கு அடுத்ததாக இதய நோய் முக்கியமானதொன்று.  ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களே இதற்கு முக்கிய காரணம். இவற்றில் இருந்து விடுபட சில  இயற்கை வழிகளைப் பார்ப்போம்.

செம்பருத்திப் பூவில்  கொழுப்பைக் கரைக்கக் கூடிய சக்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் செம்பருத்தி பூவில் உள்ள மகரந்தத்தை எடுத்து விட்டு, அதன் இதழ்களை சாப்பிட்டு வந்தால் இதய அடைப்புகள் நீங்கும்.

துளசி இலைச் சாறும் தேனும் சம அளவில் எடுத்து 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும்.

அத்திப்பழத்தை காய வைத்து தூளாக்கி தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.

இதயத்தில் ஊசி குத்துவது போல் வலி இருந்தால் செம்பருத்தி பூ, கருந்துளசி இரண்டையும் சம அளவில் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியதும் , அந்த குடிநீரை 10 நாட்கள் பருகி வர வலி நீங்கும்.

மாதுளைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் இதயம் பலப்படும்.

வெண்தாமரை இதழ்களை காய வைத்து தூளாக்கி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.

கருத்து தெரிவிக்க