கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக முன் வைக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு ஜூலை 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
குறித்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏழு பேர் கொண்ட நீதிபதி குழு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின்போது, ஜூலை 18 ம் திகதி பிரதிவாதிகளுக்கு வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது, அதே நேரத்தில் ஜூலை 23 எதிர்-ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு மனு தாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து 11 பேர் இணைந்து மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
கருத்து தெரிவிக்க