உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இனிப்பு பானங்கள் மூலம் புற்று நோய்: ஆய்வில் எச்சரிக்கை

சோடா மற்றும் பழச்சாறு போன்ற சீனி கலந்த பானங்களை உட்கொள்வது சில ஆபத்தான புற்றுநோய்களை உருவாக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.

சமீபத்திய காலங்களில் சீனி கலந்த பானங்களின் நுகர்வு மற்றும் அதிக கலோரி கொண்ட பானங்கள் நுகர்வு மூலம் உடல் பருமன் அதிகரிப்பு தொடர்பான அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இது புற்றுநோய் ஆபத்து காரணியாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த ஆய்விற்கு 100,000 க்கும் மேற்பட்ட முதியவர்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 79 சதவீதம் பெண்கள்.7 வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவர்கள் பங்கெடுத்தனர்.

இந்நிலையில் மார்பக புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி (புரோஸ்டேட்) புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய்கள் உட்பட பல புற்றுநோய் ஏற்பட சீனி பானங்கள் காரணமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

சர்க்கரை பானங்கள் ஒரு நாளைக்கு 100 மில்லி அதிகமாக நுகர்வது புற்றுநோய்க்கான 18 சதவிகித ஆபத்தையும் மற்றும் மார்பக புற்றுநோயில் 22 சதவிகிதம் அதிகரிப்பையும் ஏற்படுத்த கூடியது என அவர்கள் கண்டறிந்தனர்.

சீனி கலந்த -இனிப்பு பானங்கள் மற்றும் பழச்சாறுகள் இரண்டும் ஒரே வகையான ஆபத்தை தரக்கூடியது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வின்போது, 2,193 புற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மேற்படி நோயாளர்களின் சராசரி வயது 59 என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த ஆய்வு அவதானிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயிரணும் சீனிகலந்த பொங்கல் நோயில் கணிசமான அளவு செல்வாக்கு செலுத்தியுள்ளதாக அறிய கிடைத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், சர்க்கரை பொருட்களுக்கு வரிவிதிப்பது புற்றுநோய் விகிதங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க