புதியவைவிளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவை வெற்றி கொண்ட இங்கிலாந்து இறுதி போட்டிக்கு தெரிவானது

உலக கிண்ண கிரிக்கெட்டில் நேற்று இடம்பெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, 5 முறை வெற்றியாளரான அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் பிரவேசித்தது.

12-வது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பெர்மிங்காமில் நேற்று இடம்பெற்ற 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாடியது.

முடிவில் அந்த அணி 49 ஓவர்களில் 223 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து துடுப்பாடிய இங்கிலாந்து அணி 32.1 ஒவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 226 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தில் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து அணி உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இது 4-வது முறையாகும்.

ஏற்கனவே 1979, 1987, 1992-ம் ஆண்டுகளிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. எனினும் கிண்ணத்தை சுவீகரிக்கவில்லை.

இந்தநிலையில் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் 14-ஆம் திகதி இடம்பெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் களமிறங்கவுள்ளன.

கருத்து தெரிவிக்க