உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஐக்கியநாடு சபை இலங்கை விடயத்தில் தலையிடுதல்- வாசுதேவ நாணயக்கார

பிரதம மந்திரி ரணில் விசக்ரமசிங்கவை பொறுத்த வரையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் 10000 ஆயிரம் அகதிகளை காட்டி எதிரணிப்படையில் அமெரிக்க படையினரையும் ஐக்கியநாடுகளின் சபை படையினரையும் இலங்கையின் விடயத்தில் தலையிட வைப்பதே நோக்கமாக இருந்தது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி இருப்பதாக காட்டுவதற்கும் ரணில் விக்ரமசிங்க முயச்சித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரையும் இந்த விடயத்தில் தலையிட வைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க முயச்சித்தார் என்ற குற்றச்சாற்றையும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

கருத்து தெரிவிக்க