உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பெரும்பான்மை பலமின்றி திண்டாடும் அரசு!

ஐக்கிய தேசிய  முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று (11) மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

குறித்த பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதற்கு கூட்டு எதிரணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ள நிலையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முற்பகல் தமது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று காலை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. அதன்பின்னரே கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்படும்.

பிரேரணையை தோற்கடிப்பதற்கான சாதாரண பெரும்பான்மை பலத்தைகூட (113) கொண்டிராத ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டமைப்பின் தீர்மானத்துக்காக வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றது.

 

 

கருத்து தெரிவிக்க