நாட்டில் இன்று முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை குறைப்புத்திட்டம் அமுலுக்கு வருகிறது.
இதன்படி ஒக்டெய்ன் 92 பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 136ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
ஓக்டெய்ன் 95 பெற்றோல் 5 ரூபா குறைக்கப்பட்டு 159ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 5 ரூபா குறைக்கப்பட்டு 131 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் மண்ணெண்ணெய் மற்றும் ஒட்டோ டீசலின் விலைகள் தொடர்ந்தும் 70 மற்றும் 104 ரூபாய்களாகவே இருக்கும்.
இதேவேளை இலங்கை பெற்றோலியத்தின் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டமையை அடுத்து லங்கா இந்தியன் எரிபொருள் நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி ஒக்டெய்ன் 92 பெற்றோல் இன்று முதல் 3ரூபாவால் குறைக்கப்பட்டு 144 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
எக்ஸ்ட்ரா பிரிமியம் 95(யூரோ4) பெற்றோல் 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 162 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
சுப்பர் டீசல்( யூரோ4) 5 ரூபா குறைக்கப்பட்டு 131 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது
எனினும் லங்கா ஒட்டோ டீசலின் விலைகள் மாற்றங்கள் செய்யப்படாமல் அது லீற்றர் ஒன்று 104 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
கருத்து தெரிவிக்க