சர்வதேச போக்குவரத்துக்கு தொழிலாளர் ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் முக்கியமான கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.
உக்ரைனை சேர்ந்த கப்பல் மாலுமி ஒருவரை உடனடியாக விடுவித்து அவரை உக்ரைனுக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. கென்னடி கரில் லோ எனப்படும் மாலுமி ஏற்கனவே கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என குறித்த ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
இவர் 2016 ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றதாக சொல்லப்படும் ஏவன் கார்ட் முறைகேடு தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த முறைகேட்டின் போது இலங்கைக்கு கடற்பரப்பில் ஆயுதங்கள் சகிதம் ஒரு தனியார் நிறுவனமான எவன் கார்ட் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டுடன் குறித்த மாலுமி தொடர்புப் பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே அவரை விடுவிக்க கோரி சர்வதேச போக்குவரத்துக்கு தொழிலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்து தெரிவிக்க